School Morning Prayer Activities - 21.11.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.11.2024



திருக்குறள்

பால் : பொருட்பால்

அதிகாரம் :தீ நட்பு

குறள் எண்:818

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை

சொல்ஆடார் சோர விடல்.



பொருள்:

முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை , அவர் அறியுமாறு

ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்."



பழமொழி :

சகோதரன் உள்ளவன் படைக்கு அஞ்சான்.



He who has a brother does not fear to fight.



இரண்டொழுக்க பண்புகள் :



*என்னிடம் உள்ள புத்தகம் மற்றும் நோட்டுகளில் இருந்து தாள்களை கிழித்து வீணாக்க மாட்டேன் . ஏனெனில் தாள்களை உருவாக்குவதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படுகின்றன என்பதை நான் அறிவேன்.



*எனது வீட்டிலும், பள்ளியிலும் எனது பொருட்களை உரிய இடத்தில் சரியாக அடுக்கி வைப்பேன்.



பொன்மொழி :



பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை, தட்டிக்கொடுப்பது மட்டுமாகத்தான் இருக்க வேண்டும் - விவேகானந்தர்..



பொது அறிவு :



1. முதல் உலகப்போர் நடந்த ஆண்டு எது ?



1914 ஆம் ஆண்டு .



2. உலக சமாதான சின்னம் எது ?



ஒலிவ் மரத்தின் கிளை.



English words & meanings :




Confusedகுழப்பமான,



Curiousஆர்வமாக



வேளாண்மையும் வாழ்வும் :



நோயை ஒழிக்க பூச்சிக் கொல்லிகள் உபயோகப் படுத்துவதை விட இயற்கையிலேயே எதிர்ப்பு சக்தி உடைய தாவரங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.



நவம்பர் 21இன்று



சர் சந்திரசேகர வெங்கட ராமன் அவர்களின் நினைவுநாள்




சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்



உலகத் தொலைக்காட்சி நாள்



உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.



நவம்பர் 21, 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைகாட்சிக் கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகள் அவை நவம்பர் 21 ஆம் நாளை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இக்கருத்தரங்கில் உலகில் தொலைக்காட்சியின் கூடிய முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டது. உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.



நீதிக்கதை

போட்டி




ஒரு அரசருக்கு மூன்று மகன்கள். அவர்களில் யார் கையில் அரச பதவியை கொடுப்பது என்று முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். ஆகவே அரசர் அவர்கள் மூவருக்கும் போட்டி ஒன்றை வைத்தார்.



காட்டுக்குச் சென்று ஒரு சாக்கு நிறைய இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவினை எடுத்து வந்து ஆளுக்கொரு ஏழைக்கு அவ்வுணவை கொடுக்க வேண்டும் என்றார் அரசர்.



மகன்கள் மூவரும் காட்டிற்குச் சென்றனர். முதலாமவன் மரத்தின் மீது சிரமப்பட்டு ஏறி நல்ல பழங்களாக பறித்து மூட்டையாக கட்டினான்.

இரண்டாமவன் மரத்தின் மீது ஏற கஷ்டப்பட்டு கீழே கிடந்த அழுகிய பழங்களை எடுத்து மூட்டையாக கட்டினான்.



மூன்றாமவன் ஏழை தானே சாப்பிட போகிறார் என்று அலட்சியத்துடன் நினைத்து வெறும் குப்பைகளை மூட்டையாக கட்டினான்.



மூவரும் அரசரிடம் வந்தனர். பின்பு அரசர் மூவரையும் பார்த்து, "நான் சொன்ன ஏழைகள் வேறு எவரும் இல்லை நீங்கள்தான்.



நீங்கள் கொண்டு வந்ததை இரண்டு வாரங்களுக்கு நீங்களே சாப்பிடுங்கள்" என்று கூறினார்.



நல்ல பழங்களை கொண்டு வந்த முதலாமவனே நன்றாக சாப்பிட்டு நலமுடன் திரும்பினார். பின்னர் அரச பதவியையும் ஏற்றார்.



நீதி : நல்லதே நினையுங்கள் நல்லதே நடக்கும்



இன்றைய செய்திகள் - 21.11.2024



* அரசுப் பள்ளியில் ஆசிரியர் ரமணி கொலை: சட்ட நடவடிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி.

* மத்திய அரசின் திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது: இதனால் மின்கட்டண செலவு குறையும்.

* இந்தியாவிலேயே காப்புரிமை பதிவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்ற உறுப்பினர்- செயலர் தகவல்.

* ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்: குக்கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும்.

* டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் ரபேல் நடால்.

* புரோ கபடி லீக்; பெங்களூருவை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் அபார வெற்றி.



Today's Headlines



* Govt school teacher Ramani murder: Minister Anbil Mahes promised to take legal action.

* 15,000 households have been set up with solar power plants under the central government scheme: this will reduce electricity bill costs.

* According to the member - secretary of the Tamil Nadu State Council of Science and Technology, Tamil Nadu ranks first in patent registration in India.

* ISRO satellite launch by SpaceX rocket: Villages will also get Internet facility.

* Rafael Nadal has retired from tennis.

* Pro Kabaddi League; Patna Pirates beat Bengaluru with a huge win.



Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock