TNPSC PRESS RELEASE - (12.07.2023) இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

naveen

Moderator
TNPSC PRESS RELEASE - (12.07.2023) இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


தொகுதி IV பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர்/ உதவியாளர் / வரித்தண்டலர் நிலை 1/ வரித் தண்டலர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், 30.03.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 07/2022இன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.



இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 24.07.2022 முய அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 24.03.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.



தொகுதி IV பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர் / கள உதவியாளர் / வரித்தண்டலர். நிலை 1 / வரித் தண்டலர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 20.07.2023 முதல் 10.08,2023 வரை (ஞாயிறு மற்றும் மொகரம் நீங்களைக) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண் 3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை-600 003ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.



மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும்.விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த தரவரிசை எண் / இடஒதுக்கீட்டு விதி /காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக்கடிதத்தினை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான -லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூகச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.



மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள்/ ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.



விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock