TNPSC தேர்வில் கேட்கப்பட்ட.. சுவாரசியமான மாம்பழ கேள்வி.. இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்!

naveen

Moderator
நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழம் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

நேற்று தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.

மாம்பழம்: இந்த நிலையில்தான் நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழம் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதாவது ஆங்கிலத்தில்,

An intelligent man carries 3 sacks with 30 mangoes each. As he crosses each toll, he has to give 1 mango for each sack. He crosses 30 tolls. How many mangoes he will have at the end?

(A) 0

(B) 10

(C) 20

(D) 25

(E) Answer not known என்ற கேள்வி கேட்கப்பட்டது.

முகப்பு

செய்திகள்

தேர்தல் 2024

வீடியோ

சினிமா

அரசியல்

வணிகம்

கூப்பன்கள்

விவசாயம்

போட்டோஸ்

ஜோதிடம்

மீம்ஸ்

டெலிவிஷன்

ஆசிரியர் பக்கம்

பிரஸ் ரிலீஸ்

சென்னை

டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட.. சுவாரசியமான மாம்பழ கேள்வி.. இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்!

By Shyamsundar I

Updated: Monday, June 10, 2024, 15:20 [IST]

சென்னை: நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழம் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

நேற்று தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது.

மாம்பழம்: இந்த நிலையில்தான் நேற்று நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட மாம்பழம் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அதாவது ஆங்கிலத்தில்,

An intelligent man carries 3 sacks with 30 mangoes each. As he crosses each toll, he has to give 1 mango for each sack. He crosses 30 tolls. How many mangoes he will have at the end?

(A) 0

(B) 10

(C) 20

(D) 25

(E) Answer not known என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது, ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது 'அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?

(A) 0

(C) 20

(E) விடை தெரியவில்லை

(B) 10

(D) 25

என்று கேள்வி கேட்கப்பட்டது. உங்களால் இந்த கேள்விக்கு பதில் அளிக்க முடிகிறதா என்று பாருங்கள். கேள்விக்கான பதிலை கடைசியில் கொடுக்கிறோம்.

புதிய மதிப்பெண் முறை: இந்த தேர்வில் இன்வேலிட் மதிப்பெண் என்ற முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஒரே கேள்விக்கு தவறான பதிலை முதலில் தேர்வு செய்து அதை அடித்து விட்டு பிறகு வேறு பதிலை குறித்தால் அந்த கேள்விக்கான மதிப்பெண் இன்வேலிட் ஆகிவிடும். இந்த புதிய முறை குறித்து தேர்வு மையங்களில் நேற்று தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஹால் டிக்கெட்டிலும் இந்த விதிமுறை குறிப்பிடப்பட்டுள்ளது.

சரி பதில் என்ன?: மேலே கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் ஜீரோ என்று சிலர் சொல்லலாம். ஒரு டோல் கேட்டிற்கு 3 மாம்பழம் என்றால் 30 டோல் கேட்டிற்கு 90 மாம்பழம். மூன்று வாகனங்களில் உள்ள மொத்த மாம்பழம் 90. அதனால் கடைசியில் இருப்பது என்னவோ 90-90 = ஜீரோ மாம்பழங்கள்.

ஆனால் இங்கே கேள்வியில் ஓட்டுநர் புத்திசாலியான நபர் என்று கூறப்பட்டு உள்ளது. அப்படி இருக்க

முதலில் உள்ள 10 செக் போஸ்டில் மூட்டைக்கு ஒன்று என்று 3 மூட்டைக்கு மாம்பழம் கொடுத்தால். 10 செக் போஸ்ட் முடிய 30 மாம்பழங்கள் காலி ஆகும். மீதம் மூட்டைக்கு 20 மாம்பழங்கள் இருக்கும். 3 மூட்டைக்கு தலா 20 மாம்பழங்கள் என்று 60 மாம்பழம் இருக்கும். இதை இரண்டு மூட்டையாக பிரித்து ஒரு மூட்டைக்கு 30 என்று டிரைவர் மாற்றி வைக்கலாம்.

அதன்பின் அடுத்த 15 செக் போஸ்டில் இரண்டு மூட்டையில் இருந்து தலா 1 மாம்பழம் கொடுத்தால். ஒரு மூட்டைக்கு 15 மாம்பழம் என்று 2 மூட்டைக்கு 30 மாம்பழம் போக மீதம் 30 மாம்பழம் இருக்கும். அதை ஒரு மூட்டையில் போட்டு அடுத்த 5 செக் போஸ்ட்டில் 5 மாம்பழங்கள் கொடுத்தால் மீதம் 25 மாம்பழம் இருக்கும்.

எனவே சரியான விடை 25 மாம்பழங்கள்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock