பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.06.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: கல்வி
குறள் எண்:396
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
பொருள்:மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்;அதுபோல்,
மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.நல்ல ஆரோக்கிய உணவுகள், பழங்கள் உண்டு நன்கு நீரும் அருந்துவேன்.
2.ஆரோக்கியமற்ற துரித உணவுகள், பொரித்த உணவுகள் தவிர்ப்பேன்.
பொன்மொழி :
கல்வியும் நன்னடத்தையுமே ஒரு மனிதனை நல்லவன் ஆக்குகின்றன
அரிஸ்டாட்டில்
பொது அறிவு :
1)இந்தியாவில் கடகரேகை எந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது?
விடை: ஜார்கண்ட்
2) இந்தியாவின் முதன்மை சக்தி மூலம் எது?
விடை: அனல்மின்நிலையம்
English words & meanings :
scold- திட்டுவது,reprimand- கண்டனம் தெரிவி
வேளாண்மையும் வாழ்வும் :
உலகப் பொருளாதாரத்தின் இன்றியமையாத பகுதியாக விவசாயம் உள்ளது. இது உணவு, எரிபொருள் மற்றும் தொழில்துறைக்கான மூலப்பொருட்களின் முதன்மை ஆதாரமாக உள்ளது,
ஜூன் 18 இன்று
மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்
மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்: Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி.[1] இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.
கக்கன் அவர்களின் பிறந்தநாள்
திரு. கக்கன்
பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981),[1] விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார்.
நீதிக்கதை
உயர்ந்த ஆசை
பணக்கார இளைஞனின் விலை உயர்ந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை ஏழை சிறுவன் ஒருவன் எட்டி நின்று ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக் கொண்டே அந்த இளைஞன் சிறுவனை பார்த்து கூறினார்
" இது என் அண்ணன் எனக்கு பரிசாக கொடுத்தது". சிறுவன் முகத்தில் வியப்பு. இளைஞன் உடனே கேட்டான், "இப்படி ஒரு அண்ணன் உனக்கும் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?. சிறுவன் பணிவுடன் கூறினான், "இல்லை. நான் அப்படி ஒரு அண்ணனாக வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்".
எப்போதும் எண்ணங்கள் உயர்வானவையாக இருக்கட்டும்
இன்றைய செய்திகள் - 18.06.2024
Today's Headlines
Prepared by
Covai women ICT_போதிமரம்