School Morning Prayer Activities - 12.06.2023

naveen

Moderator



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 12.06.23

திருக்குறள்
:



பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பயனில சொல்லாமை

குறள் : 191



பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.



விளக்கம்:

பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவரை எல்லாரும் இகழ்ந்துரைப்பார்கள்.



பழமொழி :

சிறு துளி பெரு வெள்ளம்.



A Penny saved is a penny gained



இரண்டொழுக்க பண்புகள் :



1. நிறைகுடம் போல ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக உறுதியாக பேசுவேன்.



2. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். எனவே அதை நான் பாதுகாப்பேன்.



பொன்மொழி :



கல்வியின் வேர்கள் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அது தரும் பழம் இனிப்பாக இருக்கும். அரிஸ்டாட்டில்



பொது அறிவு :



1. அம்சங் வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது?



அசாம்



2. ஐந்து கண்கள் உடைய பறக்கும் உயிரினம் எது?



தேனீ



English words & meanings :



Abundance - a very large quantity of something மிகுதி, ஏராளம்

chillax - calm down or relax ஓய்வெடு, அமைதிப்படு



ஆரோக்ய வாழ்வு :



நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்



நல்ல ஆரோக்கியம் என்பது நமது அன்றாட வாழ்க்கை முறையில் நாம் பின்பற்ற வேண்டிய முறையான உடற்பயிற்சி, சீரான ஊட்டச்சத்து மற்றும் போதுமான ஓய்வு ஆகியவை ஆகும்



ஜூன் 12 இன்று



குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் (World Day Against Child Labour) உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் (ஐ.எல்.ஓ) அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது[1]. ஐ.எல்.ஓ வின் 138[2] மற்றும் 182வது[3] உடன்படிக்கைகளின் ஏற்பினால் தூண்டப்பட்டு இந்த நாள் உருவாக்கப்பட்டது.



குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பதிப்புகளை முன்று வகையாக பிரித்துள்ளது.



உடல் ரீதியான பாதிப்பு

உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு மற்றும்

உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு

நீதிக்கதை



ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டை கதவை கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றி பெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும் தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாராக யோசித்து பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன் வந்தான். போட்டியில் "தோற்று விட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்? என்றார்கள். அவன் சொன்னான்," ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரி ல்லையே" என்று கூறிவிட்டு கோட்டை கதவை இளைஞன் தள்ளினான். என்ன ஆச்சரியம்" கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டை கதவுகளில் தாழ்ப்பாள் போடவில்லை. திறந்து தான் இருந்தது. பல பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்று விடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ, என்று எதற்கும் முயற்சிக்காமலே விட்டுவிடுகிறார்கள். அனைவரும் அறிந்த " முயல்- ஆமை "கதையில் முயலின் தோல்விக்கு "முயலாமையே" காரணம்.



இன்றைய செய்திகள் - 12.06.2023



*மதுரை-போடி இடையே வரும் 15ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ளனர்.



*பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் கொட்டி தீர்த்த மழை



*தமிழகத்தில் நிதி நெருக்கடி இருந்த போதிலும் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்-

முதலமைச்சர்



*சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு புறப்பட்ட புறநகர் ரயில் பேஸின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்டது.



*ஜூன் 14ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் நிலையம் பார்க்கிங் கட்டணம் உயர்வு.



*மேட்டூர் அணை- திங்கட்கிழமை தண்ணீர் திறப்பு



*இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு.



*உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - ஆஸ்திரேலியா வெற்றி



*ஆசிய கோப்பை- இந்திய ஜூனியர் மகளிர் அணி சாம்பியன்



Today's Headlines



* Train service between Madurai-Bodi will start from June 15th.



* Heavy rains in northwest Pakistan.



*Despite the financial crisis in Tamil Nadu, we are implementing new projects-

Chief Minister announced.



* A suburban train leaving Chennai Central for Thiruvallur derailed near the base bridge.



*Metro station parking fee increase from 14th June.



*Mettur Dam to be opened on Monday



*Opening of schools from 6th to 12th class today.



*World Test Championship - Australia won the Championship



*Asia Cup- Indian Junior Women's Team is the Champions



Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock