School Morning Prayer Activities - 11.06.2024

naveen

Moderator


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.06.2024





திருக்குறள்


பால் : பொருட்பால்



அதிகாரம்: கல்வி



குறள் எண்:392



எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு.



பொருள்: எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.



பழமொழி :

Humility is the best virtue



அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்.



இரண்டொழுக்க பண்புகள் :



*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.



*கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.



பொன்மொழி :



சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை!

அப்துல் கலாம்



பொது அறிவு :



1)நிலத்தில் வேகமாக செல்லும் விலங்கு எது?



சிறுத்தை



2) மின்சாரத்தை கண்டுபிடித்தவர் யார்?



பெஞ்சமின் பிராங்க்ளின்



English words & meanings :




Adamant - பிடிவாதம்,



Obstinate - வளைந்து கொடுக்காத

வேளாண்மையும் வாழ்வும்:



உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் என்பது உணவு பொருட்களுக்காக பயிர் உற்பத்தி செய்வது ஆகும். கால்நடை பெருக்கமும் இதில் அடங்கும்



நீதிக்கதை



மன்னனும் கடல் அலையும்!



இங்கிலாந்தில் வாழ்ந்த மன்னன் கானுட். இவர் பல நாடுகளை வென்று ஒரு பெரிய ராஜாங்கத்தையே தனக்கு கீழ் நிறுவினார். அதனால் இவருக்கு பெரிய அரியாசனம் கொடுத்து இவரை பெருமையாக பேச ஆரம்பித்தார்கள்.



இவர் அரியாசனம் செல்லும் இடங்கள் எல்லாம் மன்னரை எதிர்க்க ஆள் இல்லாமல் போக ஆரம்பித்தது. அரசரை எதிர்க்க ஆளில்லை என்று பெயர் ஊரெல்லாம் பரவ ஆரம்பித்தது. இந்த பெயரால் அரசரின் உடன் இருந்தவர்கள் அவரின் புகழை பாட பாட மன்னனுக்கு தலைக்கனம் ஏற ஆரம்பித்தது.



தன்னை எதிர்க்க யாராலும் முடியாது என்ற எண்ணம் அதிகமான மன்னன் ஒருநாள் திரண்டு வரும் கடல் அலை கூட என் அரியாசனத்தை பார்த்தால் நின்று விடும் என சொல்ல சிலர் அவரை உங்களால் முடியும் என்று உசுப்பேத்த அவரும் அரியாசனத்தை தூக்கி கொண்டு கடலுக்கு சென்றார்.







கடல் அலை முன்னால் தனது அரியணையை எடுத்து வைத்தார். கடலுக்கும் அவர் அரியணைக்கும் இடைவெளி இருக்க, அவர் கடல் அலையை பார்த்து நில் என சத்தமாக கத்தினார். கடல் அலை மெதுவாக அடிக்கவும், அரசரும் அவர் அருகில் இருந்தவர்கள் முகத்தில் சந்தோசம் பொங்கியது



உடனே குஷியான மன்னன் இன்னும் சத்தமாக கடல் அலையே நில் என்று சொல்ல கடலும் அதே போல அமைதியாக வீச இப்போது நின்று விடும் என நம்பினார் மன்னர். கடல் அலை சொன்னது போல நிக்குமா, என யோசித்து கொண்டே மன்னனை பார்த்தார்கள். அவர் அகோரக்ஷமாக இன்னும் கடலை பார்த்து கத்த கடல் அலை அடிக்கவில்லை.



அவ்வளவுதான் எல்லோரும் சந்தோஷத்தில் குதிக்க, மன்னரின் புகழை பாட ஆரம்பித்தார்கள். மன்னனுக்கும் தன்னால் தான் கடல் அலை வீசவில்லை என்று தோன்ற ஆரம்பித்தது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கடல் அலை சுழட்டி பெரிய அலையாக அடிக்க மன்னரின் அரியனையோடு தூக்கி வீசியது. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை



அரசரின் தலையில் இருந்த தங்க க்ரீடம் அலையில் அடித்து கீழே விழ, அவரால் அதை மற்றவர்கள் முன்னாள் நிமிர்ந்து பார்க்க முடியாமல் போனது. இப்போது தான் மன்னனுக்கு புரிந்தது. நம்மால் எதையுமே நிறுத்த முடியாது, முக்கியமாக இயற்கையை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாது என்பதை உணர்ந்தார். அதன் பிறகு அவரால் அரியணையில் ஏறி அமர மனம் வரவில்லை.



மக்களுக்கும் மற்ற ராஜ்ஜியத்திற்கும் அவர் செய்த செயல்கள் அவரை அரியணையில் மீண்டும் அமர விடாமல் தடுத்தது. இவர் செய்த செயல் நாடெங்கும் பரவியது. மன்னனின் தலைக்கனம் நீங்கியது. மீண்டும் அரியணை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் மனம் மாறினான். இருந்தாலும் இவன் கடல் அலையை நிறுத்த போவதாக கூறியது *சரித்திரத்தில்* இடம் பிடித்தது.



இன்றைய செய்திகள் - 11.06.2024



* தமிழக அரசு திட்டங்கள்: மாவட்ட ஆட்சியர்கள் உடன் தலைமைச் செயலர் 3 நாள் ஆலோசனை.



* ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் சேராத 193 மருத்துவர்களின் நியமன ஆணையை தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை ரத்து செய்தது.



* காசாவில் 80%-ஐ நெருங்கும் வேலையின்மை: மக்கள் நிதி நெருக்கடியில் தவிப்பு.



* நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



* தமிழகத்தில் வரும் 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Today's Headlines



* Tamil Nadu Government Schemes: Chief Secretary was consulting with District Collectors for 3 days.



* The Public Health Department of the Tamil Nadu Government cancelled the appointment order of 193 doctors who did not join the primary health centers.



* Unemployment nears 80% in Gaza: People are distressed with financial crisis



* India and Pakistan teams played in the 'Group-A' match of the ongoing T20 World Cup series. India won by 6 runs.



* Tamil Nadu is likely to receive light to moderate rains till 16th, according to the Chennai Meteorological Department.



Prepared by

Covai women ICT_போதிமரம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock