BASELINE ASSESSMENT SURVEY CLASS 5

naveen

Moderator
BASELINE ASSESSMENT SURVEY CLASS 5



🪷 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை திறனாய்வு (Baseline survey) மேற்கொள்ள வேண்டும்.



நாட்கள் 26.06.230முதல் 05.07.23 வரை



பாடம்

தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு.



♦️ சார்ந்த வகுப்பாசிரியர்கள் மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.



📌 *மதிப்பீடு மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டியவை*



♦️ TNSED schools செயலி மூலம் மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்.



♦️ செயலியில் மதிப்பீடு மேற்கொள்ளும் ஆசிரியரின் EMIS ID மற்றும் password பயன்படுத்த வேண்டும்.



♦️செயலியில் Ennum Ezhuthum - classroom details 5 ஆம் வகுப்பை தேர்வு செய்தல் வேண்டும் .



♦️தங்களது வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களும் EMIS students list ல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.( EMIS portal மற்றும் Tnsed செயலி இரண்டிலும் )



♦️தங்களது வகுப்பில் long absentees மாணவர்கள் இருப்பின் , அவர்கள் ஜுன் 30 க்குள் பள்ளிக்கு வருகை தர தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவன் பள்ளிக்கு வருகை தந்த பின்னர் அடிப்படை திறனாய்வு மேற்கொள்ள வேண்டும். அதுவரை அம்மாணவனுக்கு today absent என்று குறிப்பிட வேண்டும்.



♦️ அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் CWSN என்று குறிப்பிட தேவையில்லை. ஒருசில category மாற்றுத்திறனாளி மாணவர்களால் பதிலளிக்க இயலும் . அவர்களுக்கு அவர்களின் நிலைக்கு ஏற்ற வகையில் அடிப்படை திறனாய்வு மேற்கொள்ள வேண்டும். Home based மாணவர்கள் மற்றும் ஒருசில category மாற்றுத்திறனாளி மாணவர்களால் பதிலளிக்க இயலாது. அவர்களுக்கு CWSN என்று குறிப்பிட வேண்டும். தங்களது பள்ளியின் சிறப்பு ஆசிரியரின் ஆலோசனை மற்றும் உதவியை பெறலாம்.



📌 குறிப்பு:

ஒருமுறை long absent அல்லது CWSN என்று mark செய்த மாணவர்களுக்கு மீண்டும் மதிப்பீடு செய்ய இயலாது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock