11, 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: தனித் தேர்வர் ஹால்டிக்கெட் பிப்.19-ல் வெளியீடு

naveen

Moderator



தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு:தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.



இந்த தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்.19-ம்தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து தனித்தேர்வர்கள் எனும் வலைதளத்தில் சென்று தங்களின் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்), பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு 2 தேர்வுக்கும் சேர்த்து ஒரே ஹால்டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock