மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை

naveen

Moderator
தூத்துக்குடி: மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை!



நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.



தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் பள்ளி ஆசிரியராக தான் நியமனம் செய்யப்பட்டதாகவும், இந்த நியமனத்திற்கு மாவட்ட கல்வி அதிகாரி தாமதமாக நியமன ஆணை வழங்கியதாகவும், எனவே தனது பணியை வரன்முறை செய்து பணப் பலன்களை வழங்க உத்தரவிடக் கோரி, ஜான்சிராணி என்பவர் கடந்த 2019-ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜான்சிராணிக்கு பணப் பலன்களை வழங்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், 3 ஆண்டுகள் ஆகியும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவில்லை. இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஜான்சிராணி சார்பில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட கல்வி அதிகாரிக்கு 4 வாரம் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய மாவட்ட கல்வி அதிகாரியின் கோரிக்கையும் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock