பொறியியல் படிப்பு - விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

naveen

Moderator
இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் (ஜூன் 4) நிறைவடைகிறது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.



அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளில் உள்ள 1.5 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம், ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.



இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு மே 5-ம் தேதி தொடங்கியது. இதுவரை 2.24 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1.49 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றி உள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.



எனவே, மாணவர்கள் , இணையதளங்கள் வாயிலாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்‌. மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் சான்றிதழ்களை வரும் 9-ம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock