பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

naveen

Moderator



நாடு முழுவதும் இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர், ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2023-24-ம் ஆண்டுக்கு school list 2211 compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இத்திட்டத்துக்கான பெற் றோரது உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2.5 லட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2023. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நாள்:15.01.2024. இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுசெய்து 2023-24ம் ஆண்டுக்கான விண்ணப்பித்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.



இத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 8 மற்றும் 10ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப் படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப் படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10ம் வகுப்புகளில் மதிப்பெண் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் சென்று தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.



பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை Fresh Application என்ற இணைப்பின்கீழ் பதிவுசெய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மற்றும் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை ( ) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock