பள்ளி மாணவி இயக்கிய அனிமேஷன் படம் வெளியீடு - குண்டான் சுட்டி

naveen

Moderator


ஓர் ஆண்டு மட்டும் ஆன்லைன் வாயிலாக அனிமேஷன் பயிற்சி பெற்று, துணிச்சலுடன் தனி ஆளாக “குண்டான் சட்டி” என்னும் 2 மணி நேர முழுநீள அனிமேஷன் தமிழ் திரைப்படத்தை இயக்கி, 8ஆம் வகுப்பு பயிலும் 12 வயது கும்பகோணம் பி.கே.அகஸ்தி, சர்வதேச திரைப்பட வரலாற்றில் புதிய சாதனை புரிந்துள்ளார்.இந்நிலையில், இவர் இயக்கிய “குண்டான் சட்டி” திரைப்படம் தமிழகம் முழுவதும் நாளை (அக்.13) 120 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. கும்பகோணம் பூர்ணிமா கார்த்திகேயன் தம்பதியினரின் இளைய மகள் 12 வயதே ஆன பி.கே.அகஸ்தி. இவர் கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டிலும் அதிக ஆர்வம் காட்டி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தனது தனித்திறன் மற்றும் குழுத்திறனை வெளிபடுத்தி சான்றிதழ்களையும், பதக்கங்களையும், கோப்பைகளையும் குவித்துள்ளார்.



கரோனா காலகட்டத்தில் அதிகமான புத்தகங்கள் படித்தும், அதிலும் குறிப்பாக கார்ட்டூன்கள் குறித்த அனிமேஷன் புத்தகங்கள் என எண்ணற்ற புத்தகங்களை முழுமையாக படித்ததன் எதிரொலியாக, அது குறித்த ஓர் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆவல் இவருக்கு எழுந்துள்ளது.அதற்கு இவரது பெற்றோர் இசைவு தர, பின்னர் அது வளர்ந்து ஏன் புத்தகத்துடன் நிறுத்த வேண்டும்? அதனை ஏன் ஒரு திரைப்படமாக இயக்கி உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் அவரது மனதில் துளர் விட்டுள்ளது. அதனை தன் பெற்றோரிடம் மீண்டும் எடுத்து வைக்க, இளைய மகளின் ஆசையைக் கண்டு முதலில் திகைத்த பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.அதைத் தொடர்ந்து தனது கனவை சிதைக்க விரும்பாத அகஸ்தி, தனக்கென “குண்டான் சுட்டி” என வித்தியாசமான பெயர் சூட்டி யூடியூப் சேனல் தொடங்கி, அதில் வெற்றி பெறத் தொடங்கினார்.



மகளின் விடாமுயற்சி மற்றும் அவரின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியை நேரில் கண்டு வியந்த அவரின் பெற்றோர், தங்களது முடிவை மகளுக்காக மாற்றிக் கொண்டுள்ளனர்.அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு (2022) இதற்கான பூர்வாங்கப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியது. மகளின் கனவிற்காக பாட்டியின் பெயரில் செல்லம்மா மூவி மேக்கர்ஸ் என்ற பெயரில் தந்தை கார்த்திகேயனே தயாரிப்பாளராக மாறியுள்ளார். பின்னர், விறுவிறுப்பாக திரைப்பட வேலைகள் நடைபெற்று வந்தது. தற்போது தமிழ் திரையுலகில் 12 வயது பள்ளி மாணவி அகஸ்தி, குண்டான் சட்டி என்ற அனிமேஷன் திரைப்படம் வாயிலாக இயக்குநராக அறிமுகமாகி, சர்வதேச அளவில் இளம் இயக்குநர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.குழந்தைகள் வீட்டில் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்கின்றனர். குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்து கொள்கின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவ - மாணவிகளிடம் மற்றும் மாணவ - மாணவிகள் ஆசிரியர்களிடம் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது போன்ற, சிறு சிறு விஷயங்களையும் இயல்பாகவும், சிறப்பாகவும் இந்த திரைப்படத்தின் மூலம் வெளி கொண்டு வந்திருக்கிறார் மாணவி, அகஸ்தி.இது மாணவ மாணவியர்கள், பெற்றோர் என அனைத்து தரப்பினரையும் கவரும் திரைப்படமாக வெளிவரவுள்ளது. அரங்கன் சின்னத்தம்பி திரைக்கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்திற்கு எஸ்.அமர்கித் இசையமைத்துள்ளார்.



இந்த திரைப்படம் நாளை 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் 120 திரையரங்குகளில் வெளியாகிறது.ஏற்கனவே கும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இயக்குநர்கள் ஷங்கர், லிங்குசாமி, நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர்கள் தியாகு, நினைத்தாலே இனிக்கும் ராஜப்பா, உள்ளிட்ட எண்ணற்றோர் வெள்ளித்திரையில் பிரகாசித்து வருவதைப்போல, இவரும் தனக்க்கென தனி இடத்தை பிடிப்பார் என்பதில்லை ஐயமில்லை. மேலும், வரும் காலத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால், தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவேன் என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார் இளம் இயக்குநர் அகஸ்தி.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock