பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல், மறு கூட்டல், பதிவிறக்கம் செய்தல் சார்ந்து - அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் செய்திக்குறிப்பு

naveen

Moderator
பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகல், மறு கூட்டல், பதிவிறக்கம் செய்தல் சார்ந்து - அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் செய்திக்குறிப்பு.


ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை 04.06.2024 என்ற ( செவ்வாய்க்கிழமை ) பிற்பகல் 3 மணி முதல் இணையதளத்திற்குச் சென்று Notification பகுதியில் " SSLC , April 2024 . Scripts Download " என்ற வாசகத்தினை Click செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் , இதே இணையதள முகவரியில் " Application for Retotalling / Revaluation " என்ற தலைப்பினை Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் . தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து , இரு நகல்கள் எடுத்து 05,06,2024 ( புதன்கிழமை ) பிற்பகல் 3 மணி முதல் 10.06.2024 ( திங்கட்கிழமை ) மாலை 5.00 மணிவரை ( ஞாயிற்றுகிழமை நீங்கலாக ) சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் . மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.



தென்காசி , இராணிப்பேட்டை , திருப்பத்தூர் , கள்ளக்குறிச்சி , செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து , அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock