க்யூட் நுழைவுத் தேர்வுக்கு ஜன.24 வரை விண்ணப்பம்

naveen

Moderator



மத்திய பல்கலைக்கழகங்கள், அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேரபல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, வரும் கல்வியாண்டில் (2024-25) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வுக்குரிய இணையதள விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதுநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் 28-ம் தேதி வரைநடத்தப்பட உள்ளது. விருப்பம்உள்ளவர்கள் என்ற இணையதளம் வழியாக ஜனவரி 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜனவரி 25-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஜன. 27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்.



விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு பின்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் மார்ச் 7-ம்தேதி வெளியிடப்படும். தேர்வுக்கால அட்டவணை, விண்ணப்பக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011 - 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-pg@nta.ac.in என்றமின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock