கேபிள் டிவி இல்ல.. செட்-டாப் பாக்ஸ் இல்ல.. இனிமே Google TV ஸ்ட்ரீமர்.. 800+ சேனல்கள்.. ஓடிடி ஆப்கள்.. 4K தான்!

naveen

Moderator



கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதார்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வரும் நேரத்தில் கூகுள் (Google) நிறுவனமானது, கூகுள் டிவி ஸ்ட்ரீமர் (Google TV Streamer) பாக்ஸை களமிறக்கி இருக்கிறது. நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ், ஆப்பிள் டிவி உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் தொடங்கி 800+ லைவ் டிவி சேனல்கள் வரையில் கொடுப்பது மட்டுமல்லாமல், 4K ரெசொலூஷன், டால்பி விஷன், கேமரா கன்ட்ரோல், வாய்ஸ் ரிமோட் போன்ற பீச்சர்களில் மிரளவிட்டுள்ளது. இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் குறித்த விவரம் இதோ.



கூகுள் டிவி ஸ்ட்ரீமர் அம்சங்கள் (Google TV Streamer Specifications):



இந்த ஸ்ட்ரீமர் மூலம் 4K எச்டிஆர் ரெசொலூஷனில் வீடியோக்களை பார்க்க முடியும். டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 (HDR10), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) போன்ற அல்ட்ரா பிரீமியம் வீடியோ பீச்சர்களை கொண்டுள்ளது. ஆடியோவிலும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் உள்ளது.



மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. ஆகவே, ஓடிடி, டிவி சேனல்கள் என்று எதையும் கிரிஸ்டல் கிளியர் ஆடியோ மற்றும் வீடியோ தரத்தில் பார்த்து கொள்ளலாம். இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமரில் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி வருகிறது. வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் வி5.1 (Bluetooth v5.1) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.



அதேபோல எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி-சி (USB-C) மற்றும் ஈதர்நெட் (Ethernet) கனெக்டிவிட்டியும் வருகிறது. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் (Android TV OS) வருகிறது. ஸ்மார்ட் ஹோம் கனெக்டிவிட்டி (Smart Home Connectivity) வருகிறது. ஆகவே, ஸ்மார்ட் கேமரா, லைட் மற்றும் டெப்ரேச்சர் டிவைஸ் கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். அதேபோல மொபைல், ஸ்பீக்கர் காஸ்ட் செய்து கொள்ளலாம்.வாய்ஸ் ரிமோட் (Voice Remote) வருகிறது. ஆம்பியன்ட் மோட் (Ambient Mode), ஹோம் பேனல் (Home Panel), காஸ்டிங் & குரூபிங் (Casting & Grouping) மற்றும் கூகுள் போட்டோஸ் (Google Photos) சப்போர்ட் உள்ளது. இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமரில் நெட்பிளிக்ஸ் (Netflix), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), ஆப்பிள் டிவி (Apple TV), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.



அதுமட்டுமல்லாமல், 800+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். ஏஐ பீச்சர்கள் வருகின்றன. ஆகவே, ஓடிடி ஆப்கள், டிவி சேனல்கள் மட்டுமல்லாமல் ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் பீச்சர்களையும் இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் பேக் செய்துள்ளது. ஏற்கனவே, ஓடிடி வருகைக்கு பிறகு கேபிள் டிவி, செட்-டாப் பாக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. எல்லோம் ஆப் மூலமே வீடியோக்களை பார்க்க தொடங்கிவிட்டனர்.



இப்போது, கூகுள் டிவி ஸ்ட்ரீமரின் வருகை கேபிள் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ்களுக்கு மேலுமொரு அடியாக விழுந்துவிட்டது. இருப்பினும், இந்த கூகுள் டிவி ஸ்ட்ரீமர் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொண்டிருப்பதால், சற்று விலையும் அதிகமாகவே இருக்கிறது அதாவது, ரூ.8,390ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. ஹேசல் (Hazel) மற்றும் போர்சிலைன் (Porcelain) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.



ஆகஸ்ட் 6ஆம் தேதியில் இருந்து ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கூகுள் ஸ்டோர்களில் (Google Store) ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம். வரும் நாட்களில் மற்ற ஈ-காமர்ஸ் தளங்களிலும் ஆர்டருக்கு கிடைக்கலாம். பிரீமியம் கஸ்டமர்களுக்கு இது பக்கா தேர்வாக இருக்கும். அதேநேரத்தில் பழைய டிவைஸ்களுக்கு இது மாற்றாக கட்டாயம் இருக்கும்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock