குரூப்-2 தேர்வும் டார்வினின் பரிணாம கோட்பாடும்...

naveen

Moderator


==================
குரூப்-2 மெயின் தேர்வு -10 ஆண்டுகள் கடந்து வந்த பாதை

2012

300 mark objective + interview

2015

300 mark preliminary (200 question objective)
+ Mains 250 mark CBT (125x2) கணினி வழியில் ஆப்ஜெக்டிவ் + 50 mark written (எழுத்து தேர்வு)
+Interview

2018

300 mark preliminary (200 question objective)
+Mains (300 mark written) + Interview

2023

300 mark preliminary (200 question objective)
+ 100 mark tamil language (eligibility) +
Mains (300 mark written)
+ interview

2024 upcoming g2

Common preliminary
+ separate exam for ii and ii A

இந்த அளவிற்கு மாற்றம் வேறு எந்த தேர்விலும் டிஎன்பிஎஸ்சி செய்ததில்லை.

சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் கூட உயிரினங்கள் இவ்வளவு மாற்றங்களை சந்தித்திருக்குமா என்பது கேள்விக்குறியே? ??


அந்த அளவிற்கு குரூப் 2 மெயின் தேர்வில் தொடர் குழப்பங்கள் மற்றும் மாற்றங்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு ஒரே Standard pattern னிலும் குரூப் 1 மெயின் தேர்வு சிறிதளவு மாறுதலுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது.

அனைவராலும் குரூப் 1 ல் வெற்றிவாகை சூடுவது அவ்வளவு எளிதல்ல ..

அவ்வாறு இருக்க கடினமாக உழைப்பை செலுத்தி அதிகபட்சம் குரூப் 2 மெயின் தேர்வில் 4800 GP ல் ஒரு நல்ல ஊதியத்துடன் ஒரு நல்ல பதவி பெற்றிட வேண்டும் என்பதே இங்கு பெரும்பான்மை தேர்வர்களின் ஏக்கம்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக G2 தேர்விற்கான Pattern மாறிக்கொண்டே இருப்பதால் நீண்ட காலமாக தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு இறுதியில் மிஞ்சுவது தோல்வி யே

இதுதான் மெயின் சிலபஸ் என அறிவித்து குறைந்தபட்சம் ஒரு 10 ஆண்டு காலம் அதை மாற்றாமல் இருப்பதே சிறந்தது.

டிஎன்பிஎஸ்சி யின் கனிவான கவனத்திற்கு. இதை கருத்தில் கொள்ள வேண்டும்

கடைசியாக தேர்வர்களுக்காக சில வரிகள்

ஒரு தொடர் செயலில் Evolution என்பது அந்த அந்த உயிரி தன்னை தகவமைத்துக் கொள்வதற்கான ஆற்றலை பெற வேண்டும்.
சார்லஸ் டார்வினின் "தகுதியுள்ளது தப்பி பிழைக்கும்" கோட்பாடு இதுவே

100 % இது டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு பொருந்தும்."தகுதியுள்ளது தப்பி பிழைக்கும்"

ஏனையது பரிணாம மாற்றத்தில் காணாமல் போகும்

- செங்குட்டுவன்
துணை வட்டாட்சியர்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock