கர்னாடக இசை உயர் டிப்ளமோ படிப்பு: ஜூன் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

naveen

Moderator



கர்னாடக இசை வாய்ப்பாட்டு அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மியூசிக் அகாடமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கர்னாடிக் மியூசிக் பள்ளியில் கர்னாடக இசை வாய்ப்பாட்டில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. 3 ஆண்டு காலம்கொண்ட இந்த உயர் டிப்ளமோபடிப்பு, ஆண்டுக்கு 2 செமஸ்டர் களை (ஜூலை - நவம்பர் மற்றும் ஜனவரி - ஏப்ரல்) கொண்டது.



இப்படிப்பில், வரும் 2024-25கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். வர்ணம், கீர்த்தனை பாடத் தெரிந்திருக்க வேண்டும். அதோடு, மனோதர்ம சங்கீத அறிவும் அவசியம்.



இதில் சேர விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை மியூசிக் அகாடமியின் இணையதளத்தில் ( ) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், சுய விவரத்தையும் music@musicacademymadras.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கும்.



வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இசை வகுப்புகள் நடைபெறும்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock