எல்எல்பி சட்டப் படிப்புக்கு 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

naveen

Moderator



அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி சட்டப் படிப்புக்கு வரும் 17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரஞ்சித் ஓமன் ஆப்ரஹாம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்துசட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப் பள்ளிகளில் 3 ஆண்டுக்கான எல்எல்பி சட்டப்படிப்புக்கு விண்ணங்கள் பெறப்படுகின்றன.



இதில் சேருவதற்கான விண்ணப்பங்களை என்ற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக வரும்17-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனஅறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock