இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு.

naveen

Moderator
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 5ல் துவங்குகிறது.



இதுகுறித்து, கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன் வெளியிட்ட அறிவிப்பு:



இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, ஜூன் 5 முதல் 14 வரை, அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கும். இதற்கான கால அட்டவணை, என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.



மாணவர்கள் தங்களுக்கான நேரத்தில், நேரடியாக அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். சான்றிதழ்களின் இரண்டு நகல்களுடன், தேவையான படிவங்களையும் எடுத்து வர வேண்டும்.



விளையாட்டு வீரர் ஒதுக்கீடுக்கு மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு நேரடியாக நடக்கும்; மற்றவர்களுக்கு ஆன்லைன் வழியே சரிபார்க்கப்படும்.



இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock