ஆசிரியர் தின கவிதை ( ஆசிரியர் திரு.சுரேஷ் )

naveen

Moderator

அன்பார்ந்த ஆசானுக்காய் அழியாதிருக்க சில வரிகளோடு
இன்று வரையில்,
இதமாய் வீசிவந்த
தென்றலும் புயலாய்!
இனிமையாய் ஒலித்த சங்கீதமும்
இன்னலாய்!
இயற்கையின் சீற்றமதில்
தூசிபோல் எறியப்பட்டுவிட்டோம்!..

கலையிழந்த வாழ்வில்
கற்பனைகள் காணச் சொன்னீர்,
கோட்டைகள் பல கட்டிவிட்டோம்
காலமதை நிஜமாக்குமென!..

பிரிவுக்கோ - பிரியாவிடையிலே
புது அர்த்தம் சொன்னீர்...
'கருவறையிலிருந்து உலகை
காணும் குழந்தை...' என்றே!..

சிலை வார்த்து நீங்கள்
சித்தரித்த கதை கூறினாலும்
சிரித்துக்கொண்டே
சிலையும் கதை கேட்கும்!..
உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும்
அத்தனை அர்த்தங்கள் கண்டோம்;
என்றும் நம்முள் அவை
அழியாத சித்திரமாய்!..

கண்களே கனத்துவிட்டது,
கண்ணீரின் பாரம் தாங்காமலே...
கண்களென நாம் போற்றும் - உங்களை
காலம் பிரிக்கப் போவதையெண்ணி!..

பார் உள்ள நாள்வரை
படிந்திருக்கும் - நம் நெஞ்சமதில்
பாசமாய் - நீர் சொன்ன
பாடங்கள் அனைத்தும்!..

தவமின்றி இறைவன்
தந்த வரமென்று - உங்களை
தடையின்றி கருதுகிறோம் - இன்று
தீ மேல் நின்றேனும்
தவம் செய்யத் தயார் - உங்கள்
தடையில்லா அன்பை - வரமெனத்
தருவீரேயானால்!..

அழுது தீர்த்த பின்பும்
தீராத சில சோகங்களுண்டு,
நம்முள் எழுதி முடித்த பின்பும்
ஆறாத பல காயங்கள் மீதி!..

தயவாய் வேண்டிக்கொள்கிறோம்;
கல்லூரி வாழ்வு முற்றுப் பெற்றாலும்
நம்மோடான உறவுக்கு
முற்றுப் புள்ளி வைத்திட வேண்டாமென்றே!..

விடைகளின்றி விழி - நீர் சிந்துகின்றது
அனாதையாகிவிட்ட உறவின் துகல்களோடு...
'நம்'
அன்பார்ந்த ஆசானுக்காய்
அழியாதிருக்க சில வரிகளோடு...
புயல்களும் தென்றலாகி,
பூகம்பங்களும் பூக்களாகி,
சோதனைகள் கடந்து சாதனைகள்
உங்களோடு சங்கமமாகட்டும்!
காற்றுள்ளவரை - அதன் பணி
உங்கள் புகழ் பரப்புவதாகட்டும்!

ஆக்கம் :

Mr. B. SURESH M.Sc., (Chem) M.Ed., PGDHE
PG Assistant in Chemistry
email: resh986@gmail.com
Ph: 7339317695
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock